வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

மசாலா பூரி /masala poori

 வீதியில் விற்கும் பூரியை  எனது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .. வீட்டில் அதைப்போல முயற்சித்தது இந்த மசாலா பூரி .. இப்போது எல்லாம் இதை  வீட்டிலேயே இதை  சாப்பிட  கேட்கிறார்கள் 

தேவையான பொருட்கள் :

பொரிக்க : 

சிறிய பூரி - தேவைக்கு (ஷாப்பிங்கடைகளில் கிடைக்கும் பானி பூரி வாங்கி எண்ணெயில் பொரித்து  கொள்ளலாம் )

மசாலா செய்ய :

வேகவைக்க :
பட்டாணி - 1 கப் 
உருளைக்கிழங்கு -1 
அரைக்க :
வெங்காயம் - 1
தக்காளி -1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு - சிறிது 
கொத்தமல்லி - சிறிது 
சாட் மசாலா - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா - 1 /4 ஸ்பூன் 
மிளகாய்தூள் - 1/4 ஸ்பூன் 
பட்டை ,கிராம்பு -சிறிது
தாளிக்க :
எண்ணெய் - தேவைக்கு 
பட்டை -1
கிராம்பு -2
மிளகு - 5
அலங்கரிக்க :
வெங்காயம் - 2(பொடியாக நறுக்கியது )
மல்லித்தழை - சிறிது (நறுக்கியது )
ஓமப்பொடி மிக்சர் -சிறிது (optional )
முட்டைகோஸ் - பொடியாக நறுக்கியது சிறிது 
கேரட் - துருவியது (சிறிது )
வேகவைத்த முட்டை - நறுக்கியது (optional )
துருவிய மாங்காய் - சிறிது (optional )
இவற்றை கலந்து தனியே வைக்கவும் 

  • முதலில் உருளைக்கிழங்கு ,பட்டாணி இரண்டையும் உப்பு சேர்த்து வேக வைத்து தனியே  எடுத்துக்கொள்ளவும் .
  • வாணலில் எண்ணெய் விட்டு , அரைக்க கொடுத்த பொருட்களில்வெ ங்காயம்,பூண்டு ,பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கவும் .வதங்கியதும் அடுப்பை அணைத்து ,அரைக்க கொடுத்துள்ள மீதி பொருட்களுடன் 1ஸ்பூன் வேக வைத்த  பச்சை பட்டாணியும்சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் .
  • பிறகு  தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து ,இதனுடன் அறத்த மசாலா ,மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .
  • இதனுடன் வேகவைத்த பட்டாணி, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு இவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும் .
  • நன்கு கொதித்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும் .மசாலா குழம்பு தயார் .
  • பூரியை எண்ணையில் பொரித்து அதை உடைத்து,சிறிது எடுத்து  bowl ல் போடவும் .அதன் மீது ,மசாலா குழம்பை சிறிது ஊற்றவும் .
  • இதன் மேலே அலங்கரிக்க கொடுத்த கலவையை போடவும் .மீண்டும் உடைத்த பூரியை போட்டு ,மசாலா குழம்பு ஊற்றி , அலங்கரிக்க கொடுத்த கலவையை இட்டு , சிறிது மசாலா குழம்பு விட்டு ,பரிமாறவும் 
  • சுவையான ,மனமான மசாலா பூரி தயார் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...