திங்கள், 19 ஜூன், 2017

ஈரல் வறுவல் /goat liver fry

பொதுவாக மட்டன் ஈரல் வைட்டமின் A நிறைந்தது . குறிப்பாக குழந்தைகள் ,கர்ப்பிணிகளுக்கு மிகவும் உகந்தது . மட்டன் ஈரல் மட்டும் தனியாக வறுவல் செய்தால் சிறந்த சுவையுடன் இருக்கும் ...

தேவையான பொருட்கள் :

மட்டன் ஈரல் - 250 g
வெங்காயம் - 1(நன்கு பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
சீரக தூள் - 1 ஸ்பூன் 
மிளகுத்தூள் - 1 ஸ்பூன் 
கருவேப்பிலை - ஒரு கொத்து 
பட்டை ,கிராம்பு  - தலா 2
ஏலக்காய்-1
உப்பு,எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை :

  • முதலில் ஈரலை சுத்தம் செய்து ,சிறு துண்டுகள் செய்து மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் , சீரக தூள்,மிளகுத்தூள் ,உப்பு ,சிறிது இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து கிளறி ,10 நிமிடங்கள் ஊற விடவும் .
  • பின் வாணலில் எண்ணெய் விட்டு , பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் , பொடியாக நறுக்கிய வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது ,கருவேப்பிலை ,பச்சை மிளகாய்  சேர்த்து வதக்கவும் .
  • இதனுடன் சிறிது உப்பும் ,மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும் .
  • இப்போது ஊற வைத்த ஈரல் துண்டுகள் சேர்த்து ,கிளறவும் . 
  • சிறிது தண்ணீர் தெளித்து ,சிம்மில்  மூடி 10 நிமிடங்கள்வேக விடவும் 
  • வறுவல் பதத்துக்கு வந்ததும் நிறுத்தி இறக்கவும் 
  • மிளகுத்தூள் ,அல்லது மிளகாய்தூள் உங்கள் காரத்துக்கு ஏற்ப கூட்டியோ ,குறைத்தோ  கொள்ளலாம் .
  • சுவையான மணமான ஈரல் வறுவல் தயார் 

 



4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...